August 08, 2026

தன்னிறைவை தேடும் எதிர்காலங்கள்

உயிர் சூழலில் தன்னிறைவை காண முனையும் சாப்டூர் பள்ளி மாணவர்கள் 
மா: காய்ந்த தென்னங்கீற்றுகளை ஏன் இப்படி தோப்பின் நடுவில் போட்டு வைத்துள்ளீர்கள்?

பா: நாம் பயணிக்க நெடுஞ்சாலைகள் தேவைப்படுவது போல், தோப்பில் மண் புழுக்கள் உருவாகி பயணிக்க போடப்பட்ட நெடுஞ்சாலை இது. காய்ந்த விவசாய கழிவுகளை போட்டு முறையாக மாட்டு சானத்தை தெளித்து வந்தால், அங்கு மண் புழுக்கள் உருவாகி தோப்பின் கிழக்கும் மேற்கும் - கீழும் மேலும் பயணிக்குமல்லவா?



July 16, 2025

வேப்ப முத்து நம் சொத்து

ஆனி - ஆடி
இது வேப்பங்கொட்டை உதிரும் காலம். 

வேப்பங்கொட்டை இயற்கை விவசாயத்தில் ஒரு முக்கியமான மூலதனம். அதிசய குணங்களை கொண்ட இந்த இயற்கை வளத்தை ஆங்காங்கே பெண்களும் முதியோர்களும் சேகரித்து கொண்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். 

வேப்ப விதையின் கருவில் இருக்கும் அஜாதிரசடின் (azadirachtin ) என்ற சேர்மம் இன்று விவசாயம், மருத்துவம், அழகு சாதனம் என்று பல தொழில் துறைகளில் உபயோகிக்கப்படும் ஓர் முக்கியமான மூலப்பொருளாகும். இன்று கடைகளில் கிடைக்கும் அநேக வேப்பம் புண்ணாக்கு இந்த அஜாதிரசடின் சேர்மத்தை பிரித்த பின் அரைத்தவையே. அஜாதிரசடின் இல்லாத புண்ணாக்கு நமக்கு அதிகம் பயன் தராது. எனவே, வேப்ப விதைகள் பெரு வர்த்தகர்களை போய் சேராமல், நாமே அவற்றை கோமியத்தில் 2 நாள் ஊற வைத்து வேண்டும் வண்ணம் உபயோகித்து கொள்ளுதலே நல்லது. 

'நம்மூர் இயற்கை வளம் நமக்கே சொந்தம்' என்ற மனநிலை தற்சார்பும் சந்தோஷமும் கொண்ட வாழ்க்கைக்கு அடிப்படையாகும். இன்று நம்மை அடிமையாக்கி வரும் விசைகளை நிர்மூலாமாக்க இந்நிலைப்பாடு ஒன்றே போதும்!!

ஆதலால், வேப்ப விதை என்ற இந்த அரிய பொக்கிஷத்தை சேகரித்தல்-சந்தை விலையில் கொள்முதல் செய்தல்-அந்தந்த பகுதியில் இயற்கை விவசாயம்/சார்ந்த தொழில்கள் செய்து வருவோர்க்கு கொண்டு சேர்த்தல் ஆகிய பணிகள் நம் எல்லோருடைய கடமையாகுமல்லவா?

சேகரித்த வேப்ப விதைகளை கொள்முதல்/விநியோகம் செய்ய உதவி தேவைப்பட்டால் எங்களை அணுகவும்:


குமரப்பா தன்னிறைவு பண்ணையம் - 99802 61767

January 13, 2025

நிலைத்த வேளாண்மையை நோக்கி - மர துவரை

 குரோதி வருடம் ஆவணி மாதம் விதைக்கப்பட்ட மர துவரை இம்மார்கழி மாதம் பூப்பெய்தும் பட்டம் அடைந்துள்ளது.





 வருடாந்திர துவரை செடிகள் மஞ்சள் நிறத்தில் பூ பூக்கும். இவை சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் பூ பூக்கின்றன. இவை 4-5 வருடங்கள் நின்று பலன் தரக்கூடியவை. இதன் வேர்கள் ஆழமாய் சென்று நுண் உரங்களை எடுத்து வல்லவை.

குறைந்த மனித சக்தியை உபயோகித்து நிறைந்த அறுவடையை தரக்கூடியவை.




நிலைத்த வேளாண்மைக்கு மற்றும் நிலைத்த பொருளாதாரத்திற்கும் குமரப்பா தன்னிறைவு பண்ணையத்தை இட்டுச் செல்பவை 🙏🏻

தன்னிறைவை தேடும் எதிர்காலங்கள்

உயிர் சூழலில் தன்னிறைவை காண முனையும் சாப்டூர் பள்ளி மாணவர்கள்  மா: காய்ந்த தென்னங்கீற்றுகளை ஏன் இப்படி தோப்பின் நடுவில் போட்டு வைத்துள்ளீர்க...